சுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….!! – scoreheros.com

சுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….!!

கணன்கோம்ஸ் அனுசரணையில் கொடுக்குளாய் சக்திவேல் வி.க நடாத்தும் மாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வலைப்பாடு மெசியா அணியை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 06:01 என்ற கோல் கணக்கில் மெசியா அணி வெற்றி பெற்று சம்பியனானது.

மெசியா அணி சார்பாக சுமன் 03 & கொலின்ஸ், அஜந்தன், பிரகாஸ் ஆகியோர் தலா ஒரு கோலையும் & செந்தமிழ் அணி சார்பாக யூட் ஒரு கோலையும் பெற்று கொடுத்தனர்.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சுமன் அவர்களும், தொடராட்ட நாயகனாக யூட் அவர்களும், சிறந்த பின்கள வீரராக ஜொய்சன் அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக ஜெபரஜின் அவர்களும் & வளர்ந்து வரும் வீரராக அருண் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மெசியா அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *