சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி….!! – scoreheros.com

சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி….!!

பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் கொற்றாவத்தை சிவானந்தா வி.க பருத்தித்துறை, வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்ட சுற்று போட்டியில்

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றமையால் வழங்கப்பட்ட

சமநிலை தவிர்ப்பு உதையில் 07:06 என்ற கோல் கணக்கில் றேஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனானது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக வர்மனும் , சிறந்த கோல் காப்பாளராக கீர்த்தனன் அவர்களும் , சிறந்த பின்கள வீரராக கெளதமன் அவர்களும் , அதிக கோல்களை பெற்ற வீரராக ஆர்த்திகன் அவர்களும் & வளர்ந்து வரும் வீரராக அலெக்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

றேஞ்சர்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *