
FA கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து இலங்கை சிறைச்சாலைகள் அணி மோதியது.
இவ் ஆட்டத்தின் முதலாவது கோலை ஞானமுருகன் அணி பெற்று கொண்டது எனினும் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சிறைச்சாலைகள் அணி இரு கோல்களை பெற்று கொள்ள
ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் சிறைச்சாலைகள் அணி வெற்றி பெற்றது.
ஞானமுருகன் அணி சார்பாக பவித்திரன் ஒரு கோலை பெற்று கொடுத்ததார்.
இலங்கை சிறைச்சாலைகள் அணியில் வடக்கினை சேர்ந்த கஜகோபன் & வின்சன் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சிறைச்சாலைகள் அணிக்கு எமது வாழ்த்துக்கள் & ஞானமுருகன் அணிக்கு எமது பாராட்டுகள்.